திருப்பூர்:
திருப்பூர் கரட்டாங்காடு 4-வது வீதியை சேர்ந்தவர் மணிமேகலை (வயது 36). இவர் நேற்று அதி காலை 5 மணி அளவில் ஊக்கை (சேப்டி பின்) தெரி யாமல் விழுங்கிவிட்டார். அதனால் தொண்டை வலி அதிகமானது. திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவரை திருப்பூர் மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் அறிவுறுத் தலின்பேரில், காது, மூக்கு, தொண்டை டாக்டர்கள் சுரேஷ்ராஜ்குமார், ரகுராம் ஆகியோர் பரிசோதனை செய்தனர்.
பின்னர் எக்ஸ்-ரே எடுத்து பார்த்தபோது மணிமேகலை யின் தொண்டைப்பகுதியில் ஊக்கு திறந்த நிலையில் மாட்டிக்கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே அவ ருக்கு மயக்கவியல் நிபுணர் நளினா, மயக்கமருந்து கொடுத்தார்.
எந்தவித காயமும் இன்றி தொண்டையில் சிக்கிய ஊக்கை டாக்டர்கள் அகற்றினார்கள். அறுவை சிகிச்சை செவிலியர்கள் சிலம்பரசன், சுகன்யா ஆகி யோர் உறுதுணையாக இருந்தனர். பின்னர் மணிமே கலை நலமுடன் சிகிச்சையில் உ உள்ளார்.