சிகிச்சைக்கு வந்த மாணவியிடம் சில்மிஷம்..! மயங்கி விழுந்த மருத்துவர்.!!

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் சேதுபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜபருல்லாகான். 70 வயதான இவர் மருத்துவராக உள்ளார். பாரதி நகர் பகுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவர் ஜபருல்லாகான் கிளினிக்கிற்கு 19 வயது கல்லூரி மாணவி சிகிச்சைக்காக சென்றார். மாணவிக்கு சிகிச்சை அளித்த போது ஜபருல்லாகான் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதை மாணவி தன் தாயாரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார், உடனே தன் மகளை அழைத்து சென்று ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜபருல்லா கானை கைது செய்தனர்.

அவரை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்திய போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜபருல்லா கானை கைது செய்தனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?