தேனி:
தேனி மாவட்டம் சிகாப்த் என்பவர் ஆயுதப்படை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு ஸ்கூட்டரை நிறுத்தி யாரும் வருகிறார்களா? என சுற்றும் முற்றும் பார்க்கிறார்.
பின்பு, கடை வாசலில் கூடையில் வைக்கப்பட்ட மாம்பழங்களில் இருந்து 600 ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ மாம்பழத்தை திருடி தன் ஸ்கூட்டரில் போடும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாம்பழம் திருடிய வழக்கில் காவலரை பணியிடை நீக்கம் செய்து கேரள காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
in
க்ரைம்