சேலம்:
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள முத்துநாயக்கன்பட்டி ஊரின் மத்திய பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடைக்கு அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வாரச்சந்தை, கோயில் மற்றும் அம்மா பூங்கா உள்ளிட்ட வர்த்தகங்கள் இயங்கி வருகின்றது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சுமார் மூன்று ஆண்டுக்கு மேல் போராடி வருகின்றனர்.
- ஆனால் எவ்வித நடவடிக்கை இல்லாததால் இன்று அரசு மதுபான கடை பூட்டு போடும் போராட்டத்தை அறிவித்தனர். இதைத் தொடர்ந்து சுமார் 11. 30மணியளவில் பூட்டு போடுவதற்காக சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையில் பொதுமக்கள் ஒன்றிணைந்து வரும்பொழுது பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் இன்னும் 30நாட்களில் இந்த மதுபான கடையை மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல ஒப்புதல் அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
in
அரசியல்