கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவர் என்று ஒரே நாளில்.?

சேலம்:

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே தின்னப்பட்டி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடைய மனைவி பேபி இவர் கடந்த 23ஆம் தேதி அன்று சமையல் செய்து கொண்டிருக்கும் பொழுது வீட்டு உபயோக சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல் பூசாரிப்பட்டி வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவருடைய மகன் முருகேசன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த பொழுது அவர் புகைபிடிக்கும் பொழுது அருகில் இருந்த மண்ணெண்ணையில் தீப்பிடித்தது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அவரை சேர்த்தனர்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காடையாம்பட்டி அருகே தீவிபத்தில் படுகாயமடைந்த இருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒரே நாளில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!