17 வயதில் கட்டாய திருமணம்...! 18 வயதில் காதல் திருமணம்.!!

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜான்சிராணி மற்றும் பழைய கருவாட்சி கிராமத்தை சேர்ந்த ஞானமுத்து என்பவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததுள்ளனர். இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவர, ஜான்சி ராணிக்கு 17 வயது இருக்கும்போதே கிளிண்டன் என்பவருடன் கட்டாய கல்யாணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் 18 வயது பூர்த்தியடைந்த ஜான்சிராணி கடந்த 18 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனான ஞானமுத்து வீட்டிற்கு சென்று காதலனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக கிளின்டன் அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காதல் திருமணம் செய்துகொண்ட ஜான்சிராணி தனக்கும், தனது காதல் கணவருக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று கோரியுள்ளார். பின்னர், போலீசார் குழந்தை திருமணம் செய்து வைத்த பெற்றோரை கைது செய்தனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk