விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்ட முதியவர் கைது..!

சேலம்:

ஓமலூர் அருகே விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்ட முதியவரை அதிரடியாக தொளசம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த மானத்தாள் கிராமம், கங்காணிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன் மகன் ராஜாக்கண்ணு. இவர் தனது தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டு இருப்பதாக சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் உடனடியாக கஞ்சா பயிரிட்ட முதியவரை கைது செய்ய உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் தாரமங்கலம் ஆய்வாளர் தொல்காப்பியன் உள்ளிட்டோர் அந்தப் பகுதிக்கு சென்று விவசாயி ராஜாகண்ணுவை மடக்கி பிடித்தனர்.

தொடர்ந்து அவரது விவசாய தோட்டத்தில் இருந்து சுமார் கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ராஜாக்கண்ணுவை கைது செய்து தொளசம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!