ராணிப்பேட்டை:
வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லுாரி முன்பு கௌரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு அரசு கல்லுாரி கௌரவுர விரிவுரையாளர்கள் நலச்சங்கத்தின் (ஷிப்ட் 1,2) வேலுார் மண்டல தலைவர் டாக்டர் இ.மலர்கொடி, தலைமையில் கிளைப் பொறுப்பாளர்கள் ராஜஸ்ரீ, மீனாட்சி, பிரேமகுமாரி, அறிவுக்கரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் 70 மேற்பட்ட அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் ஷிப்ட் 1,2 என இரண்டிலும் சேர்த்து மொத்தம் 115 கௌரவ விரிவுரையாளர்கள் கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். பல முறை அரசுக்கு கோரிக்கை வைத்து பணிநிரந்தரம் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.
கல்லுாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் நேர்காணல் முறையை பின்பற்றவும், எழுத்து தேர்வு முறையை கைவிட வேண்டும். அரசாணை 56ஐ பின்பற்றி உடனடியாக கெளரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கருப்பு பட்டை அணிந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்