மத்திய அரசு நிருபர் என்று கூறி பல இடங்களில் கைவரிசை காட்டிய போலி நிருபர் கைது..!

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில் போலி நிருபர் ஒருவரை சின்ன சேலம் போலீசார் கைது செய்தனர்.

சின்ன சேலம் அருகே உள்ள பங்காரம் காட்டுக்கொட்டகையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அரசு அதிகாரிகளிடம் தன்னை மத்திய அரசு செய்தியாளர் எனவும், தனக்கு மத்திய அரசு முத்திரையுடன் இரண்டு கார்கள் கொடுத்துள்ளதாகவும் கூறி ஏமாற்றியுள்ளார்.

இந்நிலையில் வெங்கடேசன் தனது நிலத்திற்கு அருகில் உள்ள நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் அதன் உரிமையாளர் வேல்முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சின்ன சேலம் போலீசார் போலி நிருபர் வெங்கடேசனை கைது செய்து அவரிடம் இருந்த இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!