வாலாஜாபேட்டை:
தமிழக முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக திருப்பத்தூர் வாணியம்பாடி ,ஆம்பூர் வேலூர், ஆகிய சாலை மார்க்கமாக இன்று சென்னைக்கு வருகை தந்த இவருக்கு அதிமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் மிக பிரம்மாண்டமாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்குச்சாவடியில் அஇஅதிமுக மாவட்ட செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் துணை கொறாடா சு.ரவி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் மற்றும் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய,நகர நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என 200-க்கும் மேற்பட்டோர் பூ மலர்களை கொடுத்து உற்சாகமான முறையில் வரவேற்ப்பளித்தனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அதிமுக நிர்வாகிகள் அவருடன் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர், பின்னர் சுங்கச்சாவடியில் இருந்து கார்வழி பயணமாக சென்னை புறப்பட்டு சென்றார்.
-மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்
in
அரசியல்