ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தனியார் பள்ளியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற சிலம்பாட்ட வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சிலம்பம் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் சுமார் ஒரு வயது முதல் 21 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் ராணிப்பேட்டை ,வேலூர் திருப்பத்தூர் திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களிலிருந்து வருகை தந்து ஒற்றை கம்பு சிலம்ப போட்டி, இரட்டை கம்பு சிலம்ப போட்டி, வாள்வீச்சு, மான்கொம்பு சுற்றுதல், இரும்பு சுருள் சுற்றுதல் ஆகிய போட்டிகள் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய 4 பிரிவுகளில் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் நான்கு மாவட்டங்களில் இருந்து சுமார் 250 சிலம்ப வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் சிலம்பம் போட்டியில் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் பேசிய மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் விளையாட்டு போட்டிகளில் தோல்விகளை சந்தித்தால் தான் வெற்றிகள் அடைய முடியும் என்று சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அறிவுரை வழங்கினார்.
-மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்