விலங்குகளுக்காகவே உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
ஹரியானாவிலுள்ள தேசிய குதிரைகளுக்கான ஆராய்ச்சி மையம் அனோகோவாக்ஸ் என்ற இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. மத்திய வேளாண்துறை அமைச்சர் தோமர் காணொளி வாயிலாக அறிமுகப்படுத்தினார்.
நாய், சிங்கம், சிறுத்தை, எலிகள் மற்றும் முயல்களுக்கு இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
– Prabhanjani Saravanan