சென்னை:
‘பொறியியல் படிப்புக்கு ஜூன் 20-ம் தேதியில் இருந்து ஜூலை 19-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்’ என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பொறியியல் சேர்க்கை குறித்து மாணவப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து சென்னை, தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் ஜூன் 20ம் தேதியில் இருந்து ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜூலை 20ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும். ஆகஸ்ட் 8ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு, ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்குகிறது; பொதுப்பிரிவினருக்கு ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்குகிறது’ என்றார்.
மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 27 முதல் தொடங்கும்’ என்றும் அவர் தெரிவித்தார்.