சென்னை:
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் தொடங்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கூடுதலாக துவங்கி இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவத் துவங்கி உள்ளது. இதற்கு முன்னால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மட்டுமே பெரிதளவிலான பாதிப்பு இருந்த நிலைமாறி 17 மாவட்டங்களில் ஒன்றிரண்டு என 150 வரை வந்துள்ளது. இதைத் தடுப்பதற்கு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கும், சுகாதார செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளதார். அதில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார்’ என்றார்.
-Laxman