பரந்தூர் விமான நிலையத் திட்டம்: நிலம் கையகப்படுத்தும் பணி இன்று முதல் தொடக்கம்!
சென்னை: தமிழகத்தின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையமாக அமையவுள்ள பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின. இந்தத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படவுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35 லட்சம் முதல் ரூ. 2.51 கோடி வரை இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு அறிவிப்புகள் அனுப்பும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம், அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என எதிர்பார்க்கப்பட்டாலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த இழப்பீட்டுத் தொகை குறித்து நில உரிமையாளர்கள் மத்தியில் கலவையான கருத்துகள் நிலவுகின்றன.
in
தமிழகம்