16 வயது மாணவருடன் பாலியல் உறவு: ஆசிரியை போக்சோ வழக்கில் கைது!
மும்பை: மும்பையில் 16 வயது பள்ளி மாணவருடன் பாலியல் உறவு கொண்டதாகக் கூறப்படும் 40 வயது ஆங்கில ஆசிரியை ஒருவர், போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பள்ளியில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்
மும்பையில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றி வந்த இந்த 40 வயதுப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவர் ஒருவருடன் 2024 ஆம் ஆண்டு முதல் பாலியல் உறவில் இருந்து வந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த உறவுக்கு ஆசிரியையின் தோழி ஒருவரும் உடந்தையாக இருந்ததாகத் தெரிகிறது.
பெற்றோர் புகாரால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை
மாணவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், அவரிடம் விசாரித்தபோது இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உடனடியாக, மாணவரின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்ட ஆசிரியையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் ஆசிரியையின் தோழியின் பங்கு குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் பள்ளி வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.