திருடப்பட்ட கார்களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் : முதல்வருக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை!.,

நூதன முறையில் திருடப்பட்ட கார்களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது .

சென்னையில் கருப்பசாமி மற்றும் தாமோதரன் ஆகிய இருவரும் சேர்ந்து வாடகை கார் உரிமையாளர்களிடம் சென்று தாமோதரன் தொண்டு அறக்கட்டளை என்கிற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறோம் ஆகயினால் எங்களது அறக்கட்டளைக்கு கார்கள் வேண்டும் என்று கார் உரிமையாளர்களிடம் நீங்கள் தரும் கார்களுக்கு மாதம் மாதம் கூடுதலாக வாடகை பணம் தருகிறோம் என்று ஆசை வார்த்தைகளில் பேசி நூதன முறையில் ஏமாற்றி கார்களை திருடியவர்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது.

நூதன முறையில் திருடிய நூற்றுக்கும் மேற்ப்பட்ட கார்களை மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் அடமானம் வைத்து விட்டு கருப்பசாமி மற்றும் தாமோதரன் ஆகிய இருவரும் தலைமறைவு ஆகிவிட்டனர் .

கார்களின் ஓரிஜினல் ஆர்ச் புக் இல்லாமலும் கார் உரிமையாளர்களின் கையெப்பம் இல்லாமல் அடமானம் வாங்குவது சட்ட படி குற்றமாகும் ஆகவே சட்ட விரோதமாக கார்களை அடமானம் வாங்கிய அனைவர்கள் மீதும் சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.

கார் உரிமையாளர்கள் பலரும் சொத்துக்கள் , நகைகளை விற்று மற்றும் பேங்க்களில் கடன் உதவி பெற்று டூரிஸ்ட் வாடகை கார் வாங்கி உள்ளனர். வாங்கிய கார்களுக்கு மாதம் மாதம் பைனாஸ் கட்ட முடியாமல் மிகவும் கஷ்ட பட்டு கொண்டிருக்கும் இந்த நிலையில் கார்கள் பரிபோனதனால் காரின் உரிமையாளர்கள் பலரின் வாழ்வாதாரம் பாதிக்க படும் சூழல் உள்ளது.என்பது குறிப்பிட தக்கது.

கருப்பசாமி மற்றும் தாமோதரனிடம் கொடுக்க பட்ட கார்களை மீட்டு தர வேண்டி 13-12-2021 அன்று சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் கார் உரிமையாளர்கள் புகார் மனு கொடுத்து உள்ளனர். கொடுக்க பட்ட புகார் மனுக்கு இது வரை எந்த வித நடவடிக்கை எடுக்க பட வில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

ஆகவே கார் உரிமையாளர்கள் கொடுக்க பட்ட புகார்க்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து நூத முறையில் ஏமாற்றி கார்களை திருடி சென்ற கருப்பசாமி மற்றும் தாமோதரன் மற்றும் இதில் சம்பந்த பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என சென்னை காவல் துறை ஆணையர் சங்கர் ஜீவால் அவர்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுத்துகிறது .

எனவே : கார் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்க படாமல் இருக்க மாண்புமிகு தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி நூதன முறையில் திருடப்பட்ட கார்களை மீட்டு தர தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk