ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் காக்கிச் சட்டையையே கலங்க வைத்த 'ஹனி ட்ராப்' விவகாரத்தில், போலி பெண் வழக்கறிஞர் உட்பட ஐந்து பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாக 'லாக்' செய்துள்ளனர். ஓமலூர் காவல் நிலைய எஸ்.ஐ பூபதி என்பவரை வலைவீசிப் பிடித்து, உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய இந்த 'கிளைமாக்ஸ்' சம்பவம், காவல்துறை வட்டாரத்தில் பெரும் 'ஷாக்' அலைகளை உருவாக்கியுள்ளது.
இந்த 'திக் திக்' சம்பவத்தின் பின்னணியில் உள்ள அலமேலு (25) என்ற இளம்பெண், தான் ஒரு வக்கீல் என 'பில்டப்' கொடுத்து எஸ்.ஐ பூபதியிடம் அறிமுகமாகியுள்ளார். கடந்த மே மாதம் ஒரு கொலை வழக்கு தொடர்பாகப் பேச வந்தபோது ஏற்பட்ட இந்தத் தொடர்பு, நாளடைவில் 'நெருக்கமான' உறவாக மாறியுள்ளது. பிளஸ் 2 மட்டுமே படித்துவிட்டு வழக்கறிஞர் கோட் அணிந்து காவல் நிலையத்திற்கே வந்து 'கட்டப்பஞ்சாயத்து' செய்த இந்த டுபாக்கூர் வக்கீல், வழக்கில் இருப்பவர்களை விடுவிக்க எஸ்.ஐ-யிடம் இருந்து ஏற்கனவே 92 ஆயிரம் ரூபாயை நைசாகச் சுருட்டியுள்ளார்.
சம்பவத்தன்று இரவு 11 மணியளவில், ஊமகவுண்டம்பட்டி பகுதிக்குத் தனிமையில் வரவழைக்கப்பட்ட எஸ்.ஐ பூபதி, அலமேலுவுடன் உல்லாசமாக இருந்தபோது அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல் திடீரென 'என்ட்ரி' கொடுத்துள்ளது. அந்த நெருக்கமான காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்த அந்த கும்பல், "வெளியே சொல்லிவிடுவோம்" என மிரட்டி எஸ்.ஐ-யிடம் இருந்த மூன்றரை பவுன் தங்கச் செயின் மற்றும் ஜி-பே மூலம் 27 ஆயிரம் ரூபாயைப் பறித்துக்கொண்டு தப்பியது.
இதனால் நிலைகுலைந்து போன எஸ்.ஐ, மானம் போனால் போகட்டும் எனத் துணிந்து தீவட்டிப்பட்டி போலீசில் 'கம்ப்ளைன்ட்' தட்டியுள்ளார். போலீசாரின் 'கிடுக்கிப்பிடி' விசாரணையில், இந்த மோசடி நாடகத்தின் மூளையாகச் செயல்பட்டது அலமேலுவின் சகோதரரும், காடையாம்பட்டி ஒன்றிய பா.ஜ.க தலைவருமான நபர் என்பது அம்பலமானது.
மேலும், இதில் உடந்தையாக இருந்த வி.சி.க ஒன்றிய துணைச் செயலாளர் மகன் வீரவளவன் உட்பட நான்கு பேரையும் போலீசார் கைது செய்து கம்பிக்கு பின்னால் தள்ளியுள்ளனர். ஒரு எஸ்.ஐ-யையே போலி வக்கீல் மூலம் 'ட்ராப்' செய்து பணம் பறித்த இந்தச் சம்பவம், சேலத்தில் தற்போது 'டாக் ஆஃப் தி டவுன்' ஆக மாறியுள்ளது.

