டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வந்த மர்ம மின்னஞ்சல்; திரிஷா அதிர்ச்சி; அனைத்து இடங்களிலும் சோதனை – புரளி என உறுதி.
இன்று அதிகாலை டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மர்ம மின்னஞ்சலில், நடிகை திரிஷாவின் வீடு, முதல்வர் வீடு, ஆளுநர் மாளிகை, பா.ஜ.க. தலைமை அலுவலகம், நடிகர் எஸ்.வி. சேகர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
உடனடியாகச் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் போலீசார், மோப்ப நாய் உதவியுடனும் வெடிகுண்டு நிபுணர்களுடனும் மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து இடங்களுக்கும் விரைந்து சென்று தீவிரச் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில், எந்த இடத்திலும் வெடிகுண்டோ அல்லது சந்தேகத்திற்கிடமான பொருளோ இல்லை என்பதால், இது புரளி என்பது தெரிய வந்தது.
குறிப்பாக, தேனாம்பேட்டையில் அமைந்துள்ள நடிகை திரிஷாவின் வீட்டில் தேனாம்பேட்டை போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை மேற்கொண்டனர். அப்போது திரிஷா வீட்டில் இருந்துள்ளார். இந்தச் சம்பவம் "Unusual ஆக உள்ளது" என்று போலீசாரிடம் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு மட்டும் ஒரே நாளில் மூன்று முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார், இந்த மிரட்டல் குறித்து வழக்கு பதிவு செய்து, இத்தகைய தொடர் புரளியைக் கிளப்பிவிட்டு அச்சுறுத்தும் நபர் அல்லது கும்பல் தொடர்பாகத் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
.jpg)