தொடர்ந்து விதிமீறினால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை; பயணிகள் ஒத்துழைப்பு வழங்கத் தெற்கு ரயில்வே வேண்டுகோள்!
தீபாவளிப் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், ரயில்களில் பட்டாசுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தெற்கு ரயில்வே கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
தண்டனை விவரங்கள்
ரயில் பெட்டிகளில் தீப்பற்றும் பொருட்களை எடுத்துச் செல்வது ரயில்வே சட்டத்தின்படி (Railway Act) கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது.
விதிமீறலுக்கான தண்டனைகள் பின்வருமாறு:
முதல் விதிமீறல்: ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு ரூ. 1,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
தொடர் விதிமீறல்: தொடர்ந்து இந்த விதிமீறலில் ஈடுபடும் பயணிகள் மீது, 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும்.
ரயில் பயணத்தின்போது பயணிகள் பாதுகாப்பைப் உறுதி செய்யும் நோக்கில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பட்டாசுகள் மற்றும் தீப்பற்றும் பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்த்து, பாதுகாப்பான பயணத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தெற்கு ரயில்வே பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.