விஜய்யின் புதிய அரசியல் பயணத்திற்கும் நடிகை திரிஷா ஆதரவு.. சைமா மேடையில் நெகிழ்ந்த த்ரிஷா!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோரின் நட்புறவு மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. துபாயில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நடிகை த்ரிஷா, நடிகர் விஜய்யின் புதிய அரசியல் பயணத்திற்குப் பகிரங்கமாக வாழ்த்துத் தெரிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் நடிகர் விஜய், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் தனது அரசியல் கட்சியைத் தொடங்கினார். அவருடைய இந்த முடிவு, அரசியல் வட்டாரத்திலும், திரையுலகிலும் பெரும் விவாதங்களை உருவாக்கியது. இந்த நிலையில், துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் கலந்துகொண்ட த்ரிஷா, மேடையில் பேசும்போது, விஜய்யின் புதிய பயணம் குறித்துப் பேசியுள்ளார்.
விஜய் சாரை நான் என்னுடைய ஆரம்ப காலத்திலிருந்தே அறிவேன். ஒரு நடிகராக அவர் அடைந்திருக்கும் உயரம் அபரிதமானது. அவருடைய கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் எல்லோருக்கும் தெரியும். இப்போது அவர் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவருடைய கனவுகள் எதுவாக இருந்தாலும், அது நிச்சயம் நிறைவேறட்டும். அவர் அதற்குத் தகுதியானவர்தான். அவருக்கு எனது அன்பான வாழ்த்துகள், என்று த்ரிஷா கூறியுள்ளார்.
த்ரிஷாவின் இந்த உணர்ச்சிப்பூர்வமான பேச்சு, அரங்கத்தில் இருந்த அனைவரையும் கவர்ந்தது. ஒரு நடிகையாக இருந்துகொண்டு, ஒரு சக நடிகரின் அரசியல் முடிவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த அவரது துணிச்சல் பலராலும் பாராட்டப்பட்டது. இவர்களது நெருங்கிய நட்பு கில்லி திரைப்படம் முதல் இன்று வரை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. த்ரிஷாவின் இந்த வாழ்த்து, விஜய் ரசிகர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
in
சினிமா