ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ்: தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், உடன் ஸ்டாலின்... உங்களுடன் ஸ்டாலின் என்று சொல்கிறார்கள். ஆனால், கூட்டணியில் உள்ள கட்சிகளுடனேயே ஸ்டாலின் இல்லையே. குறிப்பாக, தி.மு.க.விடம் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கேட்க ஆரம்பித்துவிட்டது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே பூசல் வெடித்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.
மேலும், காங்கிரசாருக்கு இப்போதுதான் ஞானோதயம் வந்ததே எனச் sarcastic-ஆகக் குறிப்பிட்ட அவர், விரைவில் தி.மு.க. கூட்டணி உடைந்துவிடும் என்றும், அவர்களது கூடாரம் காலியாகிவிடும் என்றும் கூறினார்.