ஆயிரக்கணக்கான திரைப்படப் பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரியர் கவிஞர் பூவை செங்குட்டுவன், வயது மூப்பின் காரணமாக தனது 90-வது வயதில் காலமானார்.
ஆயிரக்கணக்கான திரைப்படப் பாடல்களை எழுதிய மூத்த கவிஞரும் பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் (90), வயது மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார். அவரது மறைவு தமிழ்த் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூரில் வசித்து வந்த பூவை செங்குட்டுவன், தமிழ் சினிமாவின் பொற்காலத்தில் எண்ணற்ற சிறந்த பாடல்களை எழுதியுள்ளார். "நான் உங்கள் வீட்டுப் பிள்ளை", "தாயிற் சிறந்த கோவிலுமில்லை", "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்", "இறைவன் படைத்த உலகை" போன்ற அவரது பல பாடல்கள் காலத்தால் அழியாதவையாக இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
கவிஞர் பூவை செங்குட்டுவனின் மறைவுக்கு, திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.