தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கனமழை:
கடந்த 24 மணி நேரத்தில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மேடவாக்கத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. துரைப்பாக்கத்தில் 5 செ.மீ. மழையும், பள்ளிக்கரணை, கண்ணகி நகர், கோவை மாவட்டம் சோலையார் உள்ளிட்ட சில இடங்களில் 4 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
கனமழைக்கான வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
செப்டம்பர் 5: விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி.
செப்டம்பர் 6: தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர்.
செப்டம்பர் 8: ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை.
செப்டம்பர் 9: நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி.
செப்டம்பர் 10: கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி.
சென்னை வானிலை:
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் வெப்பச் சலனம் காரணமாக லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது.