முகத்தை மறைத்து வந்தாலும் எடப்பாடிதான் எனத் தெரிகிறது; திமுகவைப் பார்த்துக் கட்சி நடத்தக் கற்றுக்கொள்ளுங்கள் என கனிமொழி காட்டமான பேச்சு!
சென்னை, செப்டம்பர் 23: அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகம் சென்னையில் இருந்தாலும், அதன் அதிகாரம் டெல்லியின் கையில் கொடுக்கப்பட்டிருப்பதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி கடும் விமர்சனம் செய்துள்ளார். தி.மு.க.வைப் பார்த்து ஒரு கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, “அ.தி.மு.க. அலுவலகம் இங்கேதான் உள்ளது. ஆனால், அந்த அலுவலகத்தின் அதிகாரம் டெல்லியில் உள்ளது. ஒரு கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதை தி.மு.க.வைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். எடப்பாடி பழனிசாமி எப்படிச் சுற்றி வந்தாலும், யார் தங்களின் எதிர்காலம் என்பதை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர் என்று நேரடியாகத் தாக்கிப் பேசினார்.
கர்சீப்பால் முகத்தை மறைத்து வந்தாலும் அது எடப்பாடிதான் என்று தெளிவாகத் தெரிகிறது எனக் கூறி, அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் பா.ஜ.க.வுடனான அவர்களின் உறவு குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்தார். கனிமொழியின் இந்த அதிரடிப் பேச்சு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
in
அரசியல்