சென்னையில் மெட்ரோ ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில், 17 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி, மெட்ரோ ரயில் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், போலீசார் நடத்திய விசாரணையில், விழுப்புரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் இந்த மிரட்டலை விடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, கோயம்பேடு போலீசார் அந்தச் சிறுவனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.