தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு: சட்டமன்ற தேர்தலில் 125 தொகுதி கேட்கும் காங்கிரஸ் கட்சி! Tamil Nadu Congress Grish Chodankars Statement 125 Seats in Assembly Polls


சட்டமன்ற தேர்தலில் 125 தொகுதி வேண்டும்.. காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடிப் பேச்சு; தி.மு.க. கூட்டணிக்குள் சலசலப்பு!




தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 125 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட வேண்டும் என மிகப்பெரிய இலக்கு ஒன்றை அக்கட்சியின் மேலிடப் பார்வையாளர்
கிரிஷ் சோடங்கர் அறிவித்துள்ளார். திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் அவர் பேசும்போது, "125 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக இப்போதே கட்சித் தொண்டர்கள் தயாராக வேண்டும்," என்று அறைகூவல் விடுத்தார்.

இந்த எண்ணிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, இதுவரை இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிட்டதில்லை. இது, வரவிருக்கும் கூட்டணியில் அதிக இடங்களைப் பெறுவதற்கான ஒரு "பேரம் பேசும் யுக்தி"யாக இருக்கலாமென அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்த அறிவிப்பு தி.மு.க. கூட்டணியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 125 தொகுதிகளில் போட்டியிடுவது என்பது காங்கிரஸுக்கு ஒரு சவாலான இலக்கு. ஆனால், இது தொண்டர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் எனவும் அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த அறிவிப்புக்குத் தி.மு.க. தலைமை எப்படிப் பதிலளிக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!