அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்... 'நகைச்சுவை மன்னன்' மதன் பாப் புற்றுநோயால் காலமானார்..!

அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்... 'நகைச்சுவை மன்னன்' மதன் பாப் புற்றுநோயால் காலமானார்..!


நடிகர் மதன் பாபு புற்றுநோயால் சென்னையில் காலமானார். புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்த நிலையில், அவரது உடல் சென்னையில் உள்ள இல்லத்தில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகின் தனித்துவமான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான மதன்பாப் (71), இன்று (ஆகஸ்ட் 2 ) காலமானார் என்ற துயரச் செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது 'நச்'சென்ற உடல்மொழிகளாலும், தனித்துவமான சிரிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்த அந்தக் கலைஞன், இன்று தனது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டது, தமிழ் சினிமாவுக்கு ஒரு "பெரும் இழப்பு" என்று கூறப்படுகிறது.

கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட இவர், வங்கியாளர், தபேலா கலைஞர் எனப் பன்முகத் திறமைகள் கொண்டவர். இயக்குநர் கே. பாலசந்தர் அவர்களின் 'வானமே எல்லை' திரைப்படத்தின் மூலம் "மதன் பாப்" என அறிமுகமாகி, தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் சிகரம் தொட்டார்." தேவர் மகன், சதி லீலாவதி, தெனாலி, பூவே உனக்காக உள்ளிட்ட பல 'பாக்ஸ் ஆபிஸ் ஹிட்' திரைப்படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தைப் பிடித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், இறுதியாக ‘யமன் கட்டளை’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

கடந்த சில மாதங்களாகவே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த மதன் பாப், சிகிச்சை பலனின்றி, இன்று மாலை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவர் நோய்வாய்ப்பட்டிருந்த தகவலைக்கூட வெளியே சொல்லாமல், எப்போதும் சிரித்த முகத்துடன் மட்டுமே காணப்பட்டதாக நெருங்கிய நண்பர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். சன் டிவியில் ஒளிபரப்பான 'அசத்தப் போவது யாரு?' போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளின் நடுவராகவும் கலந்துகொண்டு, சின்னத்திரை ரசிகர்களையும் கட்டிப் போட்டவர்.

மதன் பாப்பின் மறைவுக்குத் தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பலரும் "RipMadhanBob" என்ற ஹேஷ்டேகை 'ட்ரெண்ட்' செய்து, தங்கள் சோகத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இன்று மாலை முதல் அவரது உடல், அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு, தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு சோகமான அத்தியாயமாகப் பதிவாகியுள்ளது.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com