காதலிக்கும் போது உடலுறவு.. பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது! கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
காதலிக்கும் இருவரும் ஒருவருக்கொருவர் சம்மதத்துடன் உடலுறவு கொண்ட பின்னர், அவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டால் காதலன் மீது காதலி பாலியல் வன்முறைக்கு புகார் அளிக்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருமண வாக்குறுதியின் பேரில் திருமணமான பெண், பாலியல் குற்றச்சாட்டு சுமத்த முடியாது என்று தீர்ப்பளித்த கேரளா உயர்நீதிமன்றம் சிறையில் அடைக்கப்பட்ட காதலனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையின் PRO-வாக பணியாற்றும் 28 வயது திருமணமாகாத ஆணுக்கும், அதே நிறுவனத்தில் முன் அலுவலக நிர்வாகியாக பணிபுரியும் 26 வயது திருமணமான பெண்ணுக்கும் இடையேயான காதல் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதி அளித்து பாலியல் உறவு கொண்டுள்ளனர். மேலும் 2.5 லட்சம் ரூபாய் கடன் பெற்ற பிறகு தனது போட்டோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டுவதாக, காதலன் மீது அப்பெண் புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில் போலீசார் பொய் வாக்குறுதி அளித்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அந்த நபர் மீது போலீசார் கடுமையான பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த பிரிவின் கீழ் அவருக்கு 10 வருடம் சிறைத்தண்டனை கிடைக்கும். வழக்குப்பதிவு செய்த நிலையில் ஜூன் 13ஆம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர். மருத்துவமனை PRO-வை கைது செய்ய மலப்புரம் போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் திருமணமான ஒரு பெண்ணை அவளுடன் பாலியல் உறவு கொள்ளும் நோக்கத்துடன் அழைத்துச் சென்றதாகக் கூறி அந்த நபர் மீது BNS பிரிவு 84-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதே நேரத்தில், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி சாக்குப்போக்கில் பாலியல் உறவு கொண்டதற்காக பிரிவு 69-ன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட நபர் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் "திருமண வாக்குறுதியின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளைக் கருத்தில் கொள்ளும்போது, நீதிமன்றம் இந்த நேரத்தில் அந்த உறவு சம்மதத்துடன் நடந்ததா? இல்லையா? என்பது குறித்து ஒரு முடிவுக்கு வருவது கடினம் என்பது கவனிக்கப்படுகிறது. குறிப்பாக ஒரு திருமணமான பெண் வேறொரு நபருடன் உடல் உறவில் ஈடுபடும்போது முழு சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இரு தரப்பினரும் தங்களுடைய முந்தைய திருமணம் பற்றி அறிந்திருந்தால், அவர்களுக்கிடையேயான பாலியல் உடலுறவு திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியுடன் நடந்ததாகக் கூற முடியாது" என்று நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் தனது உத்தரவில் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளின் முன்னுதாரணங்களை மேற்கோள் காட்டி குறிப்பிட்டார். எனினும், இந்த உத்தரவு இந்த வழக்கிற்கு மட்டுமே பொருந்தும். ஒவ்வொரு வழக்கின் உண்மை மற்றும் சூழ்நிலை கருத்தில் கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது. வழக்கறிஞரின் வாதத்தைக் கேட்ட நீதிபதி, "திருமணமான ஒரு பெண், விருப்பம் இல்லாமல், திருவனந்தபுரத்திலிருந்து கோழிக்கோடு வரை வந்திருக்க முடியாது. எனவே அப்பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில், மனுதாரருடன் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்கியிருக்கிறார். எனவே, இருவருக்கும் இடையேயான உடலுறவு அவரது சம்மதம் இல்லாமல் நடந்தாக கருத முடியாது.
பாலியல் வன்புணர்வு என்பது ஒரு கொடிய குற்றம்.. அத்தகைய குற்றச்சாட்டு ஒரு இளைஞனின் வாழ்க்கையை என்றென்றும் கெடுத்துவிடும்.. இத்தகைய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றம் செய்யவில்லை எனத் தெரிந்து பின்னர் விடுவிக்கப்பட்டாலும் பழிச்சொல் இளைஞர் மீது தொடரும்.. இளைஞருக்கு ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்போது, மாறிவரும் சமூகச் சூழலை நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது" என்று கூறினார்.
in
இந்தியா