MS Dhoni Birthday: தோனி என்னும் மந்திரப்புன்னகை.. 44-வது பிறந்தநாளை கொண்டாடும் Captain Cool..! MS Dhoni Birthday The magical smile of Dhoni Captain Cool celebrates his 44th birthday

 MS Dhoni birthday: தோனி என்னும் மந்திரப்புன்னகை.. 44-வது பிறந்தநாளை கொண்டாடும் Captain Cool..!



இந்திய கிரிக்கெட் உலகின் மன்னன், அசாதாரண நாயகன், கேப்டன் கூல், தல என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி இன்று (ஜூலை 7) தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சமூக வலைதளங்களில் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன், ஐசிசியின் மூன்று கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு என்றும் சொந்தக்காரகாக விளங்கும் மகேந்திர சிங் தோனியின் 44-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் அவரது ரசிகரகளால் கொண்டாடப்படுகிறது. 

நம்பிக்கை நட்சத்திரம்

ராஞ்சியில் சாதாரண குடும்பத்தில் பிறந்து ரயில்வேயில் ஊழியராக பணிபுரிந்து பல்வேறு அவமானங்களை கடந்து, இன்று நம்பிக்கை நட்சத்திரமாக நம்முன் ஜொலிக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி இடம்பிடித்து தவிர்க்க முடியாத பெயராக, ஆளுமையாக வலம் வருகிறார். கிரிக்கெட் பல இளம் வீரர்களை உருவாக்கியவர் என்ற பெருமையும் இவரையே சாரும். 

பள்ளிப்பருவத்தில் கால்பந்து அணிக்காக கோல் கீப்பராக செயல்பட்ட தோனி, இளமைக்காலத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராகவும், இந்திய அணியின் கேப்டனாகவும் வலம் வந்தார்.  இவரது ஸ்டம்பிங் ஸ்டைல், ஹெலிகாப்டர் ஷாட்டுக்கே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தன்னுடைய 18 வயதில் பீகார் அணிக்கான ரஞ்சி கோப்பையில் அறிமுகமான தோனி,  தன்னுடைய அசத்தலான செயல்பாட்டின் அடிப்படையில் இந்திய அணியில் இடம்பிடித்தார். அதன்பிறகு முதன்முதலில் 2004 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் போட்டியிலும், 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டிலும், 2006 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்றளவும் அனைவராலும் கொண்டாடப்படுகிறார். ஒரு வருடத்தில் 4 மாதம் மட்டுமே, அதாவது  ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் தோனிக்கு நாளுக்கு நாள் அவருக்கான ரசிகர்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள்.

3 ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே வீரர்

பின்னர் 2007ல் உலகக்கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்ட தோனி தன்னுடைய முதல் தொடரிலேயே இந்திய அணி டி20 சாம்பியன் பட்டத்தை வென்றது.இந்திய அணியை தோனி, ஒவ்வொரு போட்டியிலும், மிகச்சிறப்பாக வழிநடத்தினார். அதன்பலனாக, 2011-ல் இந்திய அணியை 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றி வரலாற்று சாதனைப்படைத்தது.  2013-ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியையும் வென்தன் மூலம் கிரிக்கெட் வரலாற்றிலே மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டனாக என்ற பெருமையுடன் தற்போது வரை தோனி திகழ்கிறார்.

தமிழ் மண்ணின் மைந்தன்

2008 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தோனி, தமிழ் மண்ணின் மைந்தனாகவே மாறிவிட்டார். ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் போது, தோனி தனது பேட்டை எடுத்துக்கொண்டு ஸ்டேடியத்தை நோக்கி வரும் போது, ரசிகர்களின் சத்தம் விண்ணைப்பிளக்கும் அளவிற்கு காதைக்கிழிக்கும். தோனிக்காக டிஜே போடும் பாட்டுக்கு வைப் செய்யவே ஆயிரக்கணக்கில் செலவிட்டு, சின்னசாமி ஸ்டேடியத்தில் ரசிகர்கள் குவிந்தனர். அன்றைய போட்டியில் வெற்றியோ, தோல்வியோ அன்றைய தினம் தல தரிசனம் பார்த்ததே போதும் என்று எண்ணி நிம்மதியடைவார்கள். Thala For Reason என்று ரசிகர்கள் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்து இணையத்தை அலறவிடுவார்கள்.  

சிறந்த வீரர்

தோனி இந்தியாவிற்காக மொத்தம் 90 டெஸ்ட் போட்டி, 350 ஒருநாள் போட்டி, 98 டி20 போட்டிகள் என மொத்தம் 538 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 4,876 ரன்களுடன் மொத்தம் 6 சதங்கள் மற்றும் 33 அரை சதங்கள் அடித்திருக்கிறார். மேலும், விக்கெட் கீப்பராக 256 கேட்சுகளும் 38 ஸ்டம்பிங் அடங்கும். ஒருநாள் போட்டியில், 10 சதங்கள் ,72 அரை சதங்கள் உட்பட மொத்தம் 10,773 ரன்களுடன், விக்கெட் கீப்பிங்கில் 317 கேட்சுகளும் 122 ஸ்டம்பிங்குடன், டி20 போட்டிகளில் 1,617 ரன்களுடன் எடுத்துள்ளார். 

திருமண வாழ்க்கை

கேப்டன் கூல் தோனி சாக்‌ஷியை காதலித்து  ஜூலை 4, 2010 அன்று திருமணம் டேராடூனில் திருமணம் செய்துக்கொண்டார்.  இந்த ஜோடிக்கு ZIVA என்ற பெண்குழந்தை உள்ளது. தோனி அனைத்து தருணங்களிலும் சாக்‌ஷி  பக்கபலமாக திகழ்கிறார். 

வாழ்க்கை வரலாறு

தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டு உருவான MS Dhoni Untold Story திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஹிந்தி என உலக அளவில்  பல்வேறு மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றது. அந்த படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தோனியாகவே அந்த திரைப்படத்தில் வாழ்ந்திருப்பார். 

ராணுவத்தில் கவுரவப் பதவி

தோனியின் சாதனைகளை மேலும், கவுரப்படுத்தும் விதமாக, நாட்டுக்காக விளையாட்டில் எண்ணற்ற சாதனைகளை படைத்த தோனிக்கு இந்திய ராணுவத்தில் உயரிய பொறுப்பு வழங்கப்பட்டது. உலககோப்பை வென்ற பிறகு தோனிக்கு 2011ம் ஆண்டு லெப்டினன்ட் கர்னல் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் பணியாற்றினார்.

Hall Of Fame

தோனியின் சாதனைகளை போற்றும் வகையில், இந்திய அரசு  ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் போன்ற உயரிய விருதுகளையும், ( hall of fame )ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் கவுரவமும் வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் பலமுறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ள தோனி,  ரசிகர்கள் அவருக்கு வைத்த கேப்டன் கூல் அந்த பெயருக்கு டிரேட்மார்க் விண்ணப்பத்தை பதிவு செய்திருக்கிறார். 

Captain Cool

கிரிக்கெட் வீரர் தோனி 'கேப்டன் கூல்' தலைப்புக்கு ட்ரேட்மார்க் அங்கீகாரம் உரிமை கோரி விண்ணப்பித்துள்ளார். தோனி மீது அளவு கடந்த அன்பு கொண்டுள்ள அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை பெரும்பாலும் 'கேப்டன் கூல்' என்றே அழைத்து வருகின்றனர்.  ரசிகர்கள் மீது குறையாத அன்பினை கிரிக்கெட் போட்டி தவிர்த்து தோனி ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வரும்போதெல்லாம் விமான நிலையத்தில், வரவேற்பு கொடுத்து ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். சென்னையில் தோனி விளையாடும் அடுத்த ஐபிஎல் போட்டிக்காகவும் என்றும் ரசிகர்கள் காத்திருப்பார்கள். 


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com