125 யூனிட் இலவச மின்சாரம்.. முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவிப்பு!
பீகார் தேர்தல் நெருங்கும் நிலையில், 125 யூனிட் இலவச மின்சாரம் குறித்த அறிவிப்பை முதலமைச்சர் நிதிஷ்குமார் வெளியிட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, முதல்வர் நிதிஷ்குமார் புதிய வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில், பீகார் மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆர்ஜேடி உடன் இருந்த கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜகவுடன் இணைந்து முதலமைச்சர் நிதிஷ்குமார் ஜேடியு சார்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அதன்படி அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட 30 முக்கியத் திட்டங்களுக்கு அவர் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் மாநிலத்தின் அனைத்து நுகர்வோருக்கும் 125 யூனிட் இலவச மின்சாரத்தை வழங்க உள்ளதாக நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, அனைத்து நுகர்வோருக்கும் மாதம் 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். இந்தத் திட்டம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 1.67 கோடியே குடும்பங்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம், மூத்த குடிமக்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டங்கள், பாதுகாப்பான குடிநீர் வசதி, வழித்தட மேம்பாடுகள் உள்ளிட்ட மொத்தம் 30 முக்கியத் திட்டங்களுக்கு அவர் ஒப்புதல் வழங்கியதாகவும் தெரிவித்தார்.
இந்த அறிவிப்புகள் அனைத்தும் தேர்தலையொட்டி நிதிஷ்குமாரின் அரசியல் தலையாயத்தை வலுப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களில் தனது ஆட்சி சாதனைகளை வலியுறுத்தும் வகையில் தேர்தல் சுழற்சிக்குள் குதித்து விட்டார் நிதிஷ்குமார்.
பீகார் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த இலவச மின்சாரம் திட்டம் ஒரு முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.