Mollywood's MeToo: `தமிழ் திரையுலகிலிருந்து தற்போதைக்கு எதுவும் தெரியவில்லை!' - திருமாவளவன்

மலையாள திரையுலகில் நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை இருப்பதாக, ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, பல்வேறு நடிகைகள் வெளிப்படையாக பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றனர். கேரள எம்.எல்.ஏ-வும் மூத்த நடிகருமான முகேஷ் உள்ளிட்ட சிலர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக எழுந்த கேள்விகளைத் தொடர்ந்து, கேரள சினிமாத் துறை நடிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘AMMA’ அமைப்பின் தலைவர் மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள், கூண்டோடு தங்கள் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர்.

விஷால்

இது குறித்து நடிகர் விஷாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர், “பெண்களிடம் அஜெஸ்ட்மென்ட் கேட்பவர்களை செருப்பால் அடியுங்கள்” எனக் காட்டமாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில்தான், விஷாலின் கருத்து குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி-யுமான திருமாவளவனிடம் கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், “மலையாளத்தில் AMMA என்றொரு அமைப்பு நடிகர் நடிகைகளின் பாதுகாப்புக்காக இயங்கி வருகிறது. அங்கே எழுந்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக அந்த அமைப்பை சார்ந்த அனைவரும் பதவி விலகி இருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற போர்க் குரல் நியாயமானது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை நான் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். தமிழ்நாட்டில் திரை உலகிலிருந்து அப்படி எந்த குற்றச்சாட்டுகளும் தற்போதைக்கு எழுந்ததாக தெரியவில்லை. எனவே விஷால் கருத்து குறித்து பேச எதுவும் இல்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!