சைபர் கிரைம் மூலம் 600 பேரிடம் ரூ.175 கோடி கொள்ளை: ஹைதராபாத்தில் 2 பேர் கைது | Two from Hyderabad held for 175 crore online scam

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சுமார் 600-க்கும்மேற்பட்டவர்களிடமிருந்து 2 மாதங்களில் ரூ.175 கோடி வரை கொள்ளை அடித்த சைபர் கிரைம் குற்றவாளிகளை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டவர் துபாய் நாட்டில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சைபர் கிரைமில்ஈடுபடுபவர்கள் அதிக பணம் கொள்ளை அடிப்பதால், இதற்காகவங்கிகளில் கரன்ட் அக்கவுன்ட் வைத்திருப்பவர்களை ஏஜெண்டாக வைத்துள்ளனர்.

ஹைதராபாத்தில் நடந்த சம்பவத்தில் தெலங்கானா சைபர்செக்யூரிட்டி பியூரோ போலீஸார் நடத்திய விசாரணையில் பலதிடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் 600 பேர் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது, ஹைதராபாத் சம்ஷீர் கஞ்ச் எனும் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் கடந்த பிப்ரவரி மாதம் 6 பேர் கரன்ட் வங்கி கணக்கை தொடங்கி உள்ளனர்.

இந்த வங்கி கணக்கிற்கு அடிக்கடி லட்சக் கணக்கில் பணம்வந்துள்ளது. இவைகளை விஜய்சாய் நகரைச் சேர்ந்த முகமது சோஹைல் தக்கீர் (34), முகமது பின் அகமது பவஜீர் (49) ஆகிய இருவரும் செக் மூலம் எடுத்து செல்வதும் தெரியவந்தது.

மேலும், வங்கி கணக்கு வைத்திருந்தவர்கள் ஆட்டோ ஓட்டுநர்களாவர். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கரன்ட் அக்கவுன்டா? என போலீஸாருக்கு சந்தேகம் வந்து அனைவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அந்தஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும்,தக்கீர் மற்றும் பவஜீர் ஆகிய இருவரும் தான் கமிஷன் ஆசைகாட்டி எங்களை கரன்ட் அக்கவுன்ட்டை தொடங்க வைத்தனர் என்று தெரிவித்தனர்.

செக் மூலம் மோசடி கும்பல்பணத்தை வங்கியில் இருந்து பெற்று செல்வதும் தெரியவந்தது. அந்த பணம் துபாயில் இருந்து 6 வங்கிகளுக்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. உடனே சைபர் கிரைம் போலீஸார் தக்கீர் மற்றும் பவஜீர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பொது மக்களிடமிருந்து துபாயில் உள்ள நபர் சைபர் கிரைம் மூலம் பணத்தை கொள்ளை அடித்து மேற்கண்ட 6 வங்கிகளில் டெபாசிட் செய்வார் எனவும், அவற்றை நாங்கள் இருவரும் உடனடியாகவங்கியில் இருந்து எடுத்து ஹவாலா அல்லது கிரிப்டோ கரன்சி மூலம் துபாய்க்கு அனுப்பி விடுவோம் என்றும் தெரிவித்தனர்.

இதற்கு, கமிஷன் வழங்கப்படுவதாகவும், அதில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பங்கு கொடுத்ததாகவும் ஒப்புக்கொண்டனர். 2 மாதங்கள் இப்படியாக ரூ.175 கோடிவரை கொள்ளை அடித்துள்ளதாக அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

முக்கிய குற்றவாளியை துபாயில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

Source link

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk