`ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை என் ரத்தத்தால் வளர்த்தேன்; இன்று...!'- பாஜக-வில் இணைந்த சம்பாய் சோரன் | JMM senior leader Champai soren joined in BJP

இந்த நிகழ்ச்சியில் பேசிய சம்பாய் சோரன், “மக்களுக்கு நீதி கிடைப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை என் வியர்வையாலும், ரத்தத்தாலும் நான் வளர்த்தேன். ஆனால், அதே கட்சியால் நான் அவமானப்படுத்தப்பட்டேன். அவமானத்தைப் பொறுத்துக்கொள்ளும் நிலையில் இல்லை. அதனால், பா.ஜ.க-வில் சேரவேண்டிய நிலைக்கு ஆளானேன். இன்று உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியில் உறுப்பினராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

ஜார்க்கண்ட் அரசால், டெல்லி மற்றும் கொல்கத்தாவில் நான் கண்காணிப்புக்குள்ளானபோது, பா.ஜ.க-வில் சேரவேண்டும் என்ற எனது தீர்மானம் வலுவானது” என்று கூறினார்.

ஜார்க்கண்ட்டில் ஹேமந்த் சோரன் அரசின் மிகப்பெரிய பலமே அங்கிருக்கும் பழங்குடி மக்களின் ஆதரவுதான் என்றிருக்கும் நிலையில், மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகச் செயல்பட்ட சம்பாய் சோரன் விலகியது அந்தக் கட்சியில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Source link

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?