திம்பம் மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து.!

ஈரோடு, தாளவாடி:

சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு வாழைக்காய் பாரம் ஏற்றிக்கொண்டு சரக்குவேன் நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த வேன் நேற்று இரவு 9 மணி அளவில் திம்பம் மலைப்பாதை 12-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிரைவர் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார். இதுபற்றி அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!