செயற்கையாக பழுக்க வைத்த 260 கிலோ மாம்பழம் பறிமுதல்.!

சேலம்:

சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து ஏற்காடு செல்லும் வழியில் சாலையோரங்களில் பழக்கடைகள் உள்ளன. அங்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம், பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சாலையோரம் இருந்த 48 கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. 2 கடைகளில் செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் 260 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் 25 கிலோ பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டன. பிளாஸ்டிக் கவர் பயன்படுத்திய 2 கடைகளுக்கு 4000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கடை உரிமையாளர்களிடம் பழங்களை பழுக்க வைப்பது தொடர்பாக அறிவுரை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!