சேலம்:
சேலம் மாவட்டம் சங்ககிரி, சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (52)இவர் கொங்கணாபுரம் இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்துள்ளார்.
வழக்கம் போல் பணிகளை முடித்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் கொங்கணாபுரத்தில் இருந்து சங்ககிரி நோக்கி அவர் சென்றுள்ளார். அப்போது சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை, பகுதியில் செல்லும் போது எதிர்பாரதவிதமாக லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
சம்பவம் குறித்து விரைந்து வந்த சங்ககிரி போலீஸார் சடலத்தை மீட்டு பிரயோத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்செம்பம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.