1147 பேர் மீது வழக்கு..!

திருப்பூர்:

பல்லடம் பகுதியில் பொது மக்கள் சாலைகளில் தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, காரில் செல்கையில் சீட பெல்ட் அணிந்து ஓட்டவேண்டும், போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் உள்ளன. இருந்தும் அவற்றை பின்பற்றாமல் சிலர் செய்யும் விதி மீறல்களால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பலியாகின்றன இதனை தடுக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்டபோலிஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில், பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்ட்டர் திருநாவு க்கரசு, மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பல்லடம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருசக்கரவா கனங்களில் செல்கையில் ஹெல்மட் அணியாமல் சென்ற 434 பேர் மீதும், குடி போதையில் வாகனங்களில் சென்ற 44 பேர் உள்பட மேலும் சிக்னலை மதிக்காமல் சென்றது. நான்குசக்கர வாகனங்களில் செல்கையில் சீட பெல்ட் அணியாமல் செல்வது, அதிக பாரம் ஏற்றிச்செல்வது உள்பட பல்வேறு விதமான போக்குவரத்து விதிகளை மீறிய 1147 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்க ளிடமிருந்து அபராதமாக ரூ. 7, 72, 200 வசுலிக்கப்பட்டது மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்து க்கு பரிந்துரை செய்யப்பட்டு 7 நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk