ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகாவுக்கு உட்பட்ட தாழனூர் கிராமத்தில் ரேனு என்பவர் ஆறு வருடங்களுக்கு முன்பு அதே குடியிருப்பு பகுதியில் வீடு வாங்கி கட்டி உள்ளார். பின்னர் அந்த வீட்டின் பின்புறமாக இன்னொரு இடமும் வாங்கி அந்த இடத்தில் சர்ச் ஜெபக்கூடம் அமைத்து அந்த இடத்தில் ஒலிபெருக்கி மூலம் வழிபாட்டுத்தலமாக மாற்றி இடையூறு செய்து வந்துள்ளார்.
இதனை அடுத்து அந்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் அனைவரும் வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று வட்டாட்சியரிடம் மனுவினை அளித்தனர் மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம பொதுமக்களிடம் தெரிவித்தார்.
-மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்