வாலாஜா:
வாலாஜா அருகே மிகவும் பழமை வாய்ந்த வகுப்பறை கட்டிடத்தை இடிக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த சென்ன சமுத்திரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் எல்,கே,ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 250 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பள்ளியில் 38 ஆண்டு கால பழமை வாய்ந்த நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பறை கட்டிடமானது அபாயகரமாக இருந்தது. ஆகவை அந்த கட்டிடம் கைவிடப்பட்டு பலகாலம் ஆனது. இப்படி பழமை வாய்ந்த வகுப்பறை கட்டிடம் கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்ததைத் தொடர்ந்து தற்போது பெய்து வரும் வடக்கு கிழக்கு பருவ மழை காரணமாக முற்றிலுமாக சிதலமடைந்து காணப்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் சிதலமடைந்து காணப்பட்ட வகுப்பறை கட்டிடங்கள் இடிப்பதற்கான உத்தரவானது அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் உறுதியற்ற நிலையில் சிதலமடைந்து காணப்பட்டு வந்த வகுப்பறை கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வரும் பணியினை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் லோகநாயகி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டனர்.
-மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்