சென்னை:
தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அணிவகுப்பு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்த நிலையில், தற்போது அதற்கான நிபந்தனைகள் வெளியாகியுள்ளது. இதன்படி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தக்கூடாது, லத்தி, கம்பு போன்ற ஆயுதங்களை எடுத்து செல்லக்கூடாது.
மதம், ஜாதி குறித்து தவறாக பேசக்கூடாது. இந்திய ஒருமைப்பாட்டுக்குள், இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடாது. இந்த நிபந்தனைகளை மீறி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெற்றால் உரிய நடவடிக்கை வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.