Pepper Spray : "மப்டியில் வீட்டுக்கு சென்ற உதவி ஆய்வாளர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து வழிப்பறி செய்ய முயற்சி.! தொடர் சம்பவங்கள் இதோ..!

ராணிப்பேட்டை:

பொதுவாக தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் வாகனத்தை நிறுத்துவது அல்லது அந்த வழியாக தனியாக பயணப்படுவது குறித்து ஒரு அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதற்கு காரணம் சில மர்ம நபர்கள் கொலை கொள்ளை போன்ற செயல்களில்  ஈடுபடுவதே ஆகும்.
அப்படியொரு சம்பவம் ராணிப்பேட்டையில் நடந்துள்ளது. மப்டியில் வீட்டுக்கு சென்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முகத்தில் மர்ம நபர்கள் பெப்பர் ஸ்பிரே அடித்து வழிப்பறி செய்ய முயற்சித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பழனிவேல். இவர் பணியை முடித்துவிட்டு ரத்தனகிரி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக இவர் சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஆற்காடு அருகே போலீசார் ரோந்து சென்றபோது
வழிபறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது!

ஆற்காடு:

ஆற்காடு டவுன் போலீசார் ஆற்காடு செய்யாறு ஜங்ஷன் அருகில் ரோந்து சென்றபோது அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் முன்னுக்குப் பின் பதில் அளித்தனர். விசாரணையில் அவர்கள் மாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ரமணா (வயது22), சர்மா (25), வாலாஜ வை சேர்ந்த தருண் (20) என்பதும் இவர்கள் தனியார் கல்லூரி முன்பாக நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் சீட் கவரில் இருந்து ஒரு செல்போனை திருடி சென்றது தெரியவந்தது.
மேலும் இவர்கள் வேலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. போலீசார் 3 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஆற்காடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
வாலிபர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து திருட முயன்றதில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
                                                                                                              -ஆர்.ஜே.சுரேஷ்குமார்
Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk