கன்னியாகுமரி:
கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியை சேர்ந்தவர் சகாய வினோ. இவர் கன்னியாகுமரி வடக்கு தெருவை சார்ந்த திமுக ஒன்றிய பிரதிநிதி இன்பம் என்பவரது விசைப்படகில் டிரைவராக கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலுக்கு செல்லும்போது படகில் வைத்து நிலைதடுமாறி விழுந்ததில் சகாய வினோவிற்கு முதுகு தண்டில் காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் வேலைக்கு செல்லவில்லை. இதற்காக கொடுத்த முன் பணத்தை திருப்பி கொடுக்கும் திமுக நிர்வாகி இன்பம் தனது கூட்டாளிகளுடன், சகாய வினோ வீட்டிற்கு சென்று தாக்குதல் நட்த்தியுள்ளார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.