ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் டேனியல் ஸ்மித்(31). இவர் கடந்த வருடம் ஜனவரி மாதம் ஒரு தம்பதியின் வீட்டிற்கு விருந்தாளியாக சென்றார். அந்த சமயத்தில் இரவு நேரத்தில் டேனியில் ஸ்மித் அத்தம்பதியின் படுக்கை அறையில் நுழைந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் அங்கு கணவருடன் படுக்கையில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் தூக்கத்தில் இருந்து எழுந்த அப்பெண் மற்றும் அவருடைய கணவர் ஆகிய இருவரும் ஸ்மிதை அடித்து வெளியே அனுப்பி காவல்துறையிடம் புகாரளித்தனர். இதையடுத்து காவல்துறையினர் கைது செய்தனர். இருப்பினும் தான் செய்த குற்றத்தை ஸ்மித் ஒப்புக்கொள்ளவில்லை.
இதனிடையே, ஒராண்டாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டும் அல்லாமல், மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.