"நான் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணமும் தோன்றுகிறது, அப்படி ஏதும் நிகழ்ந்தால் மேற்கண்ட இராசிபுரம் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தான் அதற்கு முழு காரணம்" - வாகன உரிமையாளரின் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!

நாமக்கல்:

என்னுடைய பெயர் S.கார்த்திகேயன் (டிரைவர் & உரிமையாளர்) நான் ராசிபுரத்தில் தற்போது வசித்து வருகிறேன். என்னுடைய வண்டி எண் TN-28-BU 5097 தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ராசிபுரம் கோட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் வண்டி ஓட்டி கொண்டிருக்கின்றேன், சமீப காலமாக மேற்கண்ட குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி செய்யும் உயர் அதிகாரிகள் என் மீது ஏதோ காழ்புணர்ச்சி கொண்டு எனது வண்டியை
அரசு பணிகளுக்கு பயன்படுத்துவதில்லை.

நான் கேட்டதற்கு நீ எங்களை அட்ஜஸ்ட் செய்து போக வேண்டும் என்று கூறுகின்றனர். நானும் சில நேரங்களில் அதிகாரிகள் சொல்லுகிறார்கள் என்று அவர்களுடைய சொந்த வேலைகளுக்கும் அவர்களுடன் எனது வாகனத்தில் சென்றும் வந்தேன், இருந்தபோதிலும் எனக்கு அதிகளவில் மன உளைச்சலை கொடுத்ததால் நான் சில நேரங்களில் அதிகாரிகளின் அரசாங்க வேலை போக மற்ற அவர்களின் தனிப்பட்ட வேலைகளுக்கு
நான் செல்வதில்லை மீண்டும் என்னை என்னுடைய வாகனத்தை எடுத்துக்கொண்டு வரச் சொல்கிறார்கள், எனக்கு இதில் உடன்பாடு இல்லை. இதனால் என்னை பழிவாங்கும் நோக்கத்தோடு மேற்கண்ட அதிகாரிகள் என் வண்டியை அரசு பணிகளுக்கு எடுத்து பயன்படுத்தாமல் என்னை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்கள். இதனால் நான் வருமானம் இழந்து கடந்த சில மாதங்களாக தவித்து வருகிறேன். வண்டிக்கு கடன் தவணையும் கட்ட முடியாமல் நான் குடும்பமும் நடத்த வருமானமும் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறேன், எனவே நான் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணமும் தோன்றுகிறது. அப்படி ஏதும் நிகழ்ந்தால் மேற்கண்ட இராசிபுரம் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தான் அதற்கு முழு காரணமவார்கள். எனவே உயர் அதிகாரிகள் மேற்கண்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
S.கார்த்திகேயன்
ராசிபுரம்,

இவ்வாறு இவர் கூறியுள்ளது தற்போது வாகன உரிமையாளரின் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk