வேலூர்:
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் பங்களா மேடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (27) இவரது மனைவி நந்தினி (23) இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், விக்னேஷ் தனது குடும்பத்தினருடன் மாமனாரின் ஊரான தேவலாபுரத்திற்கு கோவில் திருவிழாவிற்காக சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை விக்னேஷ் நந்தினி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் துப்பட்டாவால் நந்தினியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே நந்தினி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் காவல்துறையினர், நந்தினியின் உடலை கைப்பற்றினர், இந்நிலையில், அப்பகுதி மக்கள் விக்னேஷை சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.