மதுரை:
மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்து யூடிப்பர்ஸ்களின் கருத்து சுதந்திரத்திற்கான வெற்றி எனவும் , பொய் வழக்கு பதிந்த திமுகவிற்கு பாடம் என் மதுரை மாநகர் பாஜக தலைவர் டாக்டர்.சரவணன் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பிரபலமாக திகழும் மதுரையைச் சேர்ந்த மாரிதாஸ், வலதுசாரி சிந்தனையாளராக அறியப்படுகிறார். இவர் maridhas Answers என்ற பெயரில் நடத்தி வரும் யூடியூப் சேனலில் திமுகவை கடுமையாக விமர்சித்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து யூ டியூபர் மாரிதாஸ் அவருடைய டிவிட்டர் பக்கத்தில், “திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா. தேசத்திற்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக் கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதி வேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்” என்ற வார்த்தைகளுடன் பதிவிட்டு இருந்தார்.
மாரிதாஸ் கைது
அந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய பின்னர் அதை தனது பக்கத்தில் இருந்து நீக்கிய நிலையில், மதுரை புதூர் காவல்நிலைய போலீசார் பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். மேலும் இன்னொரு வழக்கிலும் மாரிதாஅஸ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மாரிதாஸ்மீதான ஒரு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.
மாரிதாஸ் மீது பொய் வழக்கு
மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர்.சரவணன் பீ.பீ.குளம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தேசிய சிந்தனையாளர் மாரிதாஸ் மீது முப்படை தளபதி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக கூறி திமுக அரசு பொய்வழக்கு பதிவு செய்தது, காவல்துறையினர் அத்துமீறி அழைத்துசென்று பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர் எனவும், திமுக அரசு திட்டமிட்டு மாரிதாஸை கைது செய்து புனையப்பட்ட பொய் வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது, இந்த தீர்ப்பில் யூடியுப்பர்களுக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என கூறியுள்ளது,
கொடுங்கோல் அரசுக்கு பாடம்
இந்த தீர்ப்பு திமுக கொடுங்கோல் அரசுக்கு பாடமாக அமைந்துள்ளது உயர்நீதிமன்ற தீர்ப்பு திமுக ஆட்சிக்கு வந்தபோதே மக்களுக்கு அராஜகம் நடக்கும் என அச்சம் வந்துவிட்டது, பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவின் பெயரில் மாரிதாஸ்க்கு ஆதரவாக நின்றோம் எனவும், உயர்நீதிமன்ற வழக்கின் தீர்ப்பானது அனைத்து யூடிப்பர்ஸ்களுக்கும் இந்த வெற்றி சேரும் என்றார்.
செல்லூர் ராஜுவுக்கு பதில்
எங்கள் மீதான பொய் வழக்குகளை சட்ட ரீதியாக சந்திப்போம், பாஜகவிற்கு எதிராக கூட கருத்து சொல்லட்டும் ஆனால் எல்லாவற்றுக்கும் எல்லையுண்டு அதனை மீறினால் நடவடிக்கை எடுக்கலாம் என சரவணன் கூறினார்.போராட்டம் இல்லையென்றால் சுதந்திரமே கிடைத்திருக்காது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக தலைமை போராட்டத்தை விரும்பவில்லை என்ற கருத்துக்கு சரவணன் பதில் அளித்தார்.