ஓணம், மிலாது நபி பண்டிகை: சென்னையில் இருந்து 2,470 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
சென்னை: ஓணம், மிலாது நபி மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 2,470 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பயணிகள் வசதிக்காக, கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து இந்தச் சிறப்பு பேருந்து சேவைகள் தொடங்குகின்றன.
சிறப்புப் பேருந்துகள் இயக்கம்:
செப்டம்பர் 4: கிளாம்பாக்கத்தில் இருந்து 710 பேருந்துகளும், கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து 130 பேருந்துகளும் இயக்கப்படும்.
செப்டம்பர் 5: கிளாம்பாக்கத்தில் இருந்து 405 பேருந்துகள் இயங்கும்.
செப்டம்பர் 7: விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்காக கிளாம்பாக்கத்தில் இருந்து 875 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
பிற நகரங்களில் சிறப்பு சேவைகள்:
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். விடுமுறைக்குப் பிறகு ஞாயிறு அன்று பயணிகள் சொந்த ஊரில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்குத் திரும்ப வசதியாக, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
பயணிகள் TNSTC செயலி அல்லது இணையதளம் மூலம் தங்களது பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
