திருமங்கலத்தில் திருடப்பட்ட கார் பாகிஸ்தான் எல்லையில் கார் மீட்கப்பட்ட நிலையில், பிரபல கார் திருடன் கைது செய்யப்பட்டார்.
கார் திருடன் கைது:
கடந்த ஜூன் மாதம், சென்னை அண்ணாநகர் மற்றும் திருமங்கலத்தில் உள்ள சர்வீஸ் சென்டர்களில் விடப்பட்ட மூன்று சொகுசு கார்கள் திருடு போயின. இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது, இந்தியாவின் பிரபல கார் திருடன் சட்டேந்திர சிங் ஷகாவாட் என்பவன் இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
நாடு முழுவதும் திருட்டு: கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சொகுசு கார்களைத் திருடி வந்தவன் சட்டேந்திர சிங் ஷகாவாட் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதுச்சேரியில் கைது: ஜூன் 12-ஆம் தேதி, புதுச்சேரியில் ஒரு காரைத் திருட முயன்றபோது அவனை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஷகாவாட் அளித்த தகவலின்படி, திருடப்பட்ட மூன்று கார்களில் ஒன்று, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. அந்த காரின் பதிவு எண் மற்றும் தோற்றம் முழுவதும் மாற்றப்பட்டிருந்தது. மேலும், போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக அந்த கார் 80 நாட்களில் 45,000 கிலோமீட்டர் தூரம் ஓட்டப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் திருடப்பட்ட கார் பாகிஸ்தான் எல்லை வரை சென்றிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.