Tamil News Live Today: `அமெரிக்காவில் நோக்கியா உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம்' - முதல்வர் ஸ்டாலின் | Tamil News Live Today updates dated on 30 08 2024

`நோக்கியா உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம்’ – ஸ்டாலின்

முதலீடுகளை ஈர்பதற்காக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவில், அந்நாட்டின் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வாரீர் என அழைப்பு விடுத்தார். மேலும் தமிழகம் தொழில் தொடங்க உகந்த மாநிலம் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

இந்நிலையில் அமெரிக்க முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நோக்கியா, பே பால் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், “தெற்காசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 20 சதவிகிதம் தமிழ்நாட்டில் உள்ளது. வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.” என்றிருக்கிறார்.

மேலும், “சென்னை அடுத்த சிறுசேரியில் ஆராய்ச்சி மையம் அமைக்க நோக்கியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. PAY PAL நிறுவனத்துடன் ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கோவை சூலூரில் செமி கண்டக்டர் உபகரண ஆலை அமைக்கிறது ஈல்டு என்ஜினியரிங் நிறுவனம். மேலும் இன்பிக்ஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?